கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனம் உள்ளது இங்கு 8000 நிரந்தர தொழிலாளர்கள் பத்தாயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர் இந்த நிலையில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்க கோரியும் என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் அந்தோணி செல்வராஜ் தற்காலிக பணியிடம் நீக்கம் செய்ததை திரும்ப பெறக் கோரி அவரை பணியில் அமர்த்த கோரியும் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நெய்வேலி நேரு சிலையிலிருந்து என்எல்சி தலைமை அலுவலகத்தை முற்றுகை இட போவதாக என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிற்சங்க கூட்டமைப்பினர் இருந்தனர் இந்த நிலையில் என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் மற்றும் முக்கிய நிர்வாகிகளை போலீசார் முன்கூட்டியே கைது செய்து வட்டம் 27 இல் உள்ள மண்டபத்தில் வைத்தனர் இதனை அறிந்த தொழிலாளர்கள் தாங்களே முன்வந்து தங்களையும் கைது செய்ய கோரி அவர்களே மண்டபத்தில் உள்ளே சென்று அமர்ந்தனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது இங்கு போலீசார் ஐம்பதுக்கு மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நெய்வேலி என்எல்சியில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்க கோரியும் என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிற்சங்க தலைவரை பணியிடை நீக்கம் செய்ததை திரும்ப பெறக் கோரி அவரை மீண்டும் பணியில் அமர்த்த கோரியும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிற்சங்க தொழிலாளர்கள் என்எல்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட போவதாக போராட்டம் வைத்திருந்தனர் அதனை முன்னிட்டு அவர்களை முன்கூட்டியே நெய்வேலி போலீசார் கைது செய்ததால் தொழிலாளர்கள் தாங்களே முன்வந்து தங்களையும் கைது செய்யக்கோரி மண்டபத்தில் செல்வதால் பரபரப்பு.
No comments:
Post a Comment