புவனகிரி பகுதிகளில் உள்ளஅரசு நெல் கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கில் நெல் மூட்டைகள் தேக்கம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 1 October 2024

புவனகிரி பகுதிகளில் உள்ளஅரசு நெல் கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கில் நெல் மூட்டைகள் தேக்கம்.


கடலூர் மாவட்டம் புவனகிரி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான கீரப்பாளையம், சேத்தியாத்தோப்பு,  உள்ளிட்ட  பகுதிகளில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் பிளாஸ்டிக் தார்ப்பாய்கள் போட்டு மூடி வைக்கப்பட்டுள்ளன. மூடப்பட்ட தார்ப்பாய்கள் சேதம் அடைந்தும் உள்ளன. 

பல நெல் கொள்முதல் நிலையங்களில் குறுவை நெல் கொள்முதல் முடிந்து விட்டது. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை அரசு நெல் சேமிப்பு கிடங்கிற்கு எடுத்துச் செல்லாமல், திறந்த வெளியிலேயே மூடி வைக்கப்பட்டுள்ளது.நெல் மூட்டைகள் அடிக்கடி வருகிற மழையால் சேதம் ஏற்பட்டு வருகிறது. இவற்றை அரிசியாக்கும் போது அந்த அரிசி சரியான தரத்தில் அமையாது  என விவசாயிகள், பொதுமக்கள்  தெரிவிக்கின்றனர். மேலும் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள இடங்களில் மழை நீர் தேங்கி வருகிறது. 

தற்போது பருவ மழைக்காலம் ஆரம்பித்து விட்டதால் தினமும் மழை பெய்து வருகிறது‌. எனவே உடனடியாக  நெல் மூட்டைகளை  சேமிப்புக் கிடங்கிற்கு எடுத்து சென்று பாதுகாப்பாக வைத்து பராமரிக்க வேண்டும்எனவிவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment

*/