வீராணம் ஏரிப் பாசன உழவர்களுக்கு தண்ணீர் தராமல் சென்னைக்குத் தண்ணீர் எடுத்து செல்வதைக் கண்டித்து தமிழக காவிரி பாசன விவசாய சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 10 October 2024

வீராணம் ஏரிப் பாசன உழவர்களுக்கு தண்ணீர் தராமல் சென்னைக்குத் தண்ணீர் எடுத்து செல்வதைக் கண்டித்து தமிழக காவிரி பாசன விவசாய சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்.


கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பூதங்குடி வீராணம் ஏரி வடக்குப்புறத் தலைப்பு சென்னைக்கு குடிநீர் எடுக்கும் இடத்தின் எதிரில் தமிழகக்காவிரிப் பாசன விவசாய சங்கத்தினர், வீராணம் ஏரிப் பாசன உழவர்களுக்கு தண்ணீர் தராமல் சென்னைக்கு மட்டும் குடி தண்ணீர் எடுத்துச் செல்வதைக் கண்டித்தும்  மேலும் வீராணம் ஏரியைத் தூர் வார நடவடிக்கை எடுக்க வலியுறுத்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தியும் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தை (Chennai metro poitan water supply and sewrage board) CMWSSB க்கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம்நடத்தினர்.

இதில்மணிக்கொல்லை ராமச்சந்திரன்,பின்னத்தூர் ஹாஜா மொய்தீன், நெடுஞ்சேரி நஜிமுதீன், சிதம்பரம் சுரேஷ், வெய்யலூர் குணசேகரன், வாழக்கொல்லை ரவி, ஓடாக்க நல்லூர் இளையராஜா உள்ளிட்டநூற்றுக்கும் மேற்பட்ட உழவர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/