நடராஜர் கோவில் கருவறையை இழிவு படித்தி பேசிய தமிழக பாஜக பொறுப்பாளர் எச். ராஜா வுக்கு தெய்வீக பக்தர்கள் பேரவை நிறுவனத் தலைவர் ஜெமினி எம் என் ராதா கடும் கண்டனத்தை தெரிவித்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: உலகப் பிரசித்தி பெற்றசிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதில் எந்த தவறும் இல்லை கோயில் கருவறையி ல் கிரிக்கெட் விளையாடினால்தான் தவறு என்று பா.ஜ.க ஒருங்கிணைப்பாளர் எச் .ராஜா கூறியிருப்பது நகைப்பிற்குரியது திருக்கோவில்களில் மூலவர் இருக்கும் இடம் கருவறை ஆகும் இங்கு கடவுளின் வழிபாடு மட்டுமே.. காணிக்கையாக இறைவனுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.
திருக்கோவிலில் இறைவன் இருக்கும் இடமான கருவறை எச் ராஜாவுக்கு வேண்டுமானால் கிரிக்கெட் மைதானமாக விளங்கலாம் ஆனால் பக்தர்களுக்கும் பொது மக்களுக்கும் கருவறை இறைவனை மெய்மறத்து வணங்கும் வழிபாட்டு ஸ்தலமாகும். எனவே கருவறை கிரிக்கெட் மைதானம் என்று பொருள்படும் விதமாக எச் ராஜா பேசியது கண்டனத்துக்குரியது கடவுளும் பக்தர்களும் எச் . ராஜாவை ஒரு பொழுதும் மன்னிக்க மாட்டார்கள்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் விடுதலை சிறுத்தை கட்சி அம்மாபேட்டை பகுதி நிர்வாகி பட்டியல் இனத்தைச் சார்ந்த இளையராஜாவை தீட்சிதர்கள் தாக்கி அவரது செல்போனை பிடுங்கிய அராஜ செயலுக்கு ராஜா ஆதரவு அளிப்பது கண்டனத்துக்குரியது, மேலும் தமிழகத்தில் 2500 திருக்கோவிலுக்கு குடமுழுக்கு நடத்திய திராவிட மாடல் ஆட்சி நடத்திவரும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோரை ஆன்மிகத்திற்கு எதிராக செயல்படுகிறார்கள் என்று உண்மைக்கு மாறாக எச் ராஜா விமர்சனம் செய்வது ஏற்புடையதல்ல இதை ஒருபோதும் மக்கள் நம்ப மாட்டார்கள்.
எச் ராஜா தான் இருப்பதை காட்டிக் கொள்வதற்காக மனதில் பட்டதை ஒரு மனநோயாளியை போல பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். திருக்கோவில் கருவறையை இழிவு படுத்தி பேசிய எச் ராஜா சிதம்பரம் வருகின்ற போது பக்தர்களின் எதிர்ப்பை தெரிவிக்கின்ற வகையில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக சிதம்பரத்திலிருந்து செய்தியாளர் P ஜெகதீசன்.
No comments:
Post a Comment