கடலூர் மாவட்டம் வடலூர் ரோட்டரி சங்கம் சார்பில் குறிஞ்சிப்பாடி எஸ் கே வி பள்ளி என்.எஸ்.எஸ் மாணவர்களுடன் இணைந்து மரக்கன்று நடும் விழா நடைபெற்றது வடலூர் அருகே உள்ள மேட்டுக்குப்பம் வள்ளலார் புகழ் சொல்லும் நீரோடை அருகில் மரக்கன்றுகள் நடப்பட்டது. தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட என் எஸ் எஸ் மாணவர்களுக்கு சான்றிதழும் நினைவு பரிசும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வடலூர் நோட்டரி சங்க நிர்வாகிகள் தலைவர் எஸ். செங்குட்டுவன், சாசனத் தலைவர் வி.புருஷோத்தமன், சேர்மன் எல்.ஆர்.R.ராதாகிருஷ்ணன், புதிய உறுப்பினர் என்.ஆர்.ஆர் மளிகை உரிமையாளர் மணிகண்டன், மற்றும் சங்கத்தின் அன்னபூர்ணா சேர்மன் வீ.வினோதினி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- நெய்வேலி செய்தியாளர் வீ வினோதினி
No comments:
Post a Comment