வடலூரில் போதை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மினி மேரத்தான். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 1 September 2024

வடலூரில் போதை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மினி மேரத்தான்.

 

10 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற மாரத்தான் போட்டியில் இளைஞர்கள்  சிறுவர்கள் பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பு. வள்ளலார் சத்திய ஞான சபையில் இருந்து தொடங்கிய மினி மாரத்தான் போட்டி.



கடலூர் மாவட்டம் வடலூரில் பார்வதிபுரம் கிராம மக்கள் சார்பாக  போதை பொருட்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட மினிமரத்தான் போட்டி வள்ளலார் சத்திய ஞான சபை வளாகத்தில் இருந்து தொடங்கிய  10 கிலோ மீட்டர் தூரம் சென்று குறிஞ்சிப்பாடி ராசா குப்பம் பகுதிக்கு சென்று மீண்டும் மரத்தான் போட்டி தொடங்கிய வள்ளலார் சத்திய ஞான சபையை வந்தடைந்தது. மேலும் போதை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடைபெற்ற மினி மேரத்தான் போட்டியின் கழுகு பார்வை காட்சிகள் வெளியாகி உள்ளது.


இதில் கண்ணன் என்பவர் முதலாவதாக 10 கிலோமீட்டர் தூரத்தை கடந்து முதல் பரிசான பத்தாயிரம் ரூபாயை பெற்றார் . அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து 10 பரிசுகள் வழங்கப்பட்டது.


மேலும் மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற நபர்களுக்கு எஸ் டி ஈடன் பள்ளியின் தாளாளர் தீபக் தாமஸ் பரிசுகளை வழங்கினார் இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக நெய்வேலி டிஎஸ்பி சபியுல்லா பங்கேற்றார்.

No comments:

Post a Comment

*/