நெய்வேலி என்எல்சி இரண்டாவது சுரங்க நுழைவாயில் முன்பு, நூற்றுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 1 September 2024

நெய்வேலி என்எல்சி இரண்டாவது சுரங்க நுழைவாயில் முன்பு, நூற்றுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டம்.


கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில், திறந்தவெளி சுரங்கத்தின் மூலம் நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில் என்எல்சி இந்தியா நிறுவனத்திற்கு வீடு நிலம் கொடுத்தவர்கள் உட்பட சுமார் 120 தொழிலாளர்கள், தனியார் ஒப்பந்தத்தின் மூலம், இரண்டாவது சுரங்கத்தில் கடந்த 17 வருடங்களாக பணிபுரிந்து வந்துள்ளனர். 


இந்நிலையில் தனியார் ஒப்பந்தம் முடிவடைந்ததால், வேறொரு தனியார் ஒப்பந்தத்தில், குறைந்த அளவே தொழிலாளர்களை நியமிக்கப்பட்டதாலும், பாதிக்கு மேற்பட்ட தொழிலாளர்களை வேலைக்கு வர வேண்டாம் என்று கூறியதால்,  இன்று காலை பணிக்குச் சென்ற தொழிலாளர்கள் சுமார் நூற்றுக்கு மேற்பட்டோர், இரண்டாவது சுரங்க நுழைவாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


தொடர்ச்சியாக நெய்வேலி என்எல்சி நிர்வாகம் மற்றும் அந்நிறுவனத்தில் செயல்படும் தனியார் ஒப்பந்ததாரர்கள், திட்டமிட்டே தொழிலாளர்களை வேலைக்கு வர வேண்டாம் என்று ஆள் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும், அவ்வாறு தொழிலாளர்களை பழிவாங்க கூடாது எனவும்,  தங்களை என்எல்சி நிறுவன BMC தொழிலாளராக பணி அமர்த்த வேண்டுமென கோரிக்கை வைத்து,  போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

*/