புவனகிரி அருகே மருதூர் காவல் நிலையம் முன்பு கிராம மக்கள் சாலை மறியல்; வருவாய்த் துறையும் ஆளும் அரசும் தங்களை புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 6 August 2024

புவனகிரி அருகே மருதூர் காவல் நிலையம் முன்பு கிராம மக்கள் சாலை மறியல்; வருவாய்த் துறையும் ஆளும் அரசும் தங்களை புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு.


கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே மருதூர் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட, அருந்ததியர் இனத்தை சேர்ந்த குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கான  கோவிலுக்கு செல்லும் பாதை 100 ஆண்டுகளுக்கும் மேற்பட்டு பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கோவில்  செல்ல உதவும் பாதை தற்போது பயன்படுத்த முடியாத நிலையிலும்,  அகற்றப்பட்டதாலும் வேதனை அடைந்த கிராம மக்கள் பாதையை அகற்றிய ஜேசிபி எந்திரத்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் மருதூர் காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது எந்த அதிகாரியும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. வடலூர் புவனகிரி சாலையில் மருதூர் காவல் நிலைய முன்பாக அமர்ந்து 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கிருந்த போலீசார் காவல் நிலையம் அருகில் சாலை மறியல் செய்தவர்களை இங்கே உட்கார்ந்து சாலை மறியல் செய்யக் கூடாது என்று  மிரட்டியதால், சரி நாங்கள் காவல் நிலையத்தை விட்டு  தள்ளி உட்கார்ந்து சாலை மறியல்  செய்கிறோம் என்று கிராம மக்கள் காவல் நிலையத்தை விட்டு சற்று தள்ளி அமர்ந்து சாலை மறியல் செய்தனர். கடைசி வரை எந்த அதிகாரியும் பேச்சுவார்த்தைக்கு வராததால் வேதனை அடைந்த அவர்கள் தங்களது போராட்டம் தொடரும் என்று கூறி அவர்கள் கலைந்து சென்றனர் இங்கு வசிக்கும் அருந்ததியர் இன மக்களுக்கு கடந்த பல ஆண்டுகளாகவே சுடுகாடு இல்லாத நிலை இருந்து வருகிறது. 


இதற்கு நாங்கள் வருவாய்த்துறை உள்ளிட்ட அதிகாரிகளிடம் சுடுகாடு வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில் தங்களது கோரிக்கைகளை புறக்கணித்து வருகின்றனர். அவர்கள் நினைத்திருந்தால் ஒரு மணி நேரத்திலேயே இந்த பிரச்சினையை சரி செய்யலாம். ஆனால் எங்கள் கோரிக்கையை புறக்கணித்துவிட்டு மௌனம் காத்து வருகின்றனர். மேலும் இவர்கள் வைக்கும் கோரிக்கையானது தனியாக நிலம் கையகப்படுத்தி சுடுகாடு அமைத்து தர வேண்டும் என்பதை  செய்து தரலாம். அதை செய்து கொடுக்க மனம் இல்லாத அதிகாரிகள் மறுக்கிறார்கள். 


மேலும் கோவிலுக்கு செல்லவும் தங்களுக்கு பாதை வேண்டும். மொத்தத்தில்  வருவாய்த் துறையும் எங்களை புறக்கணித்து வருகிறார்கள் என்பதையே இது காட்டுகிறது எனவும் வேதனையோடு அவர்கள் தெரிவித்தனர். 

No comments:

Post a Comment

*/