கடலுார் மாவட்டம், வடலுார், தர்மசாலையை சேர்ந்தவர் திரு முருகன் (35); நெய்வேலி தனியார் நிறுவன ஊழியர் இவரது மனைவி சிவகாமி இவர்களுக்கு கிஷோர் (15) என்ற மகனும், பரணிக்கா (10) என்ற மகளும் உள்ளனர். இவர்களில் கிஷோர், வடலூர் சந்தை தோப்பு எஸ்.டி.சியோன் மெட்ரிக் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். சிலம்பம் போட்டியில் மாநில அளவில் பரிசு பெற்றவர். கடந்த 24ம் தேதி மாலை கிஷோர் படிக்கும் பள்ளி மைதானத்தில் மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
அப்போது, சக மாணவர் ஒருவர் எறிந்த ஈட்டி, அங்கு நின்றிருந்த கிஷோர் தலையில் குத்தியது. அதில் படுகாயமடைந்த கிஷோர் சென்னை தனியார் மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மூளைச்சாவு ஏற்பட்டு உள்ளது இதற்கு பள்ளி நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும், தனியார் பள்ளிகள் துவங்கும் போது போதிய இட வசதி இல்லாமல் விளையாட்டு மைதானத்திற்கு தேவையான இடம் ஏற்பாடு செய்யாமல் மறைத்து காசு கொடுத்து தனியார் பள்ளிகள் அனுமதி பெறும் நிலை உள்ளது, போதிய இடவசதியில்லாத மைதானத்தில் ஈட்டி எறிதல் போன்ற பயிற்சிகளை நடத்துவது கண்டிக்கத்தக்கது இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், போதிய இட வசதி இல்லாமல் மைதானத்தில் ஈட்டி எறிதல் பயிற்சி அளித்ததே கிஷோர் மரணத்திற்கு காரணம் எனவே தமிழக அரசாங்கம் பள்ளி நிர்வாகத்தின் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், உயிரிழந்த கிஷோர் மரணத்திற்கு காரணமான பள்ளி நிர்வாகிகள் மீது 302 கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் முறைகேடாக அனுமதி பெற்ற பள்ளி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் முறைகேடாக அனுமதி வழங்கிய கல்வித்துறை மெட்ரிக் பள்ளி துறை மற்றும் இதர துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வடலூர் பஸ் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நகர அமைப்பு செயலாளர் ஆர் இளங்கோவன் தலைமையிலும் கே.சீனிவாசன், நமச்சிவாயம், கோமேதகவேல் ரேவதி முன்னிலையில் நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயலாளர் மாதவன் ஒன்றிய செயலாளர் தண்டபாணி மாவட்ட குழு உறுப்பினர்கள் ராஜ் ,சிவகாமி, சரவணன் ஒன்றிய குழு உறுப்பினர்கள் மணிவண்ணன் ,அழகுமுத்து ராஜேஷ் ,அசோக் குமார் வடலூர் நகர்குழு உறுப்பினர்கள் ராமலிங்கம், முருகையன் ,மணி ,மீனாட்சி நாதன் மற்றும் குறிஞ்சிப்பாடி பேரூர் உறுப்பினர் கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது
No comments:
Post a Comment