கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்புஅருகே சேத்தியாத்தோப்பு- சிதம்பரம் சாலையில் பாழ்வாய்க்கால் பகுதியில் வெங்கடேசன் என்பவரின் காலி இடம் உள்ளது.. இதில் பரதூர் கிராமத்தைச் சேர்ந்த போர்வெல் போடும் தொழிலை செய்து வரும் ஜெயராமன் மகன் மதியழகன்(44) என்பவர் போர்வெல் தளவாடப் பொருட்களை போட்டு வைத்துள்ளார்.
இந்நிலையில் இரவில் வந்த மர்ம நபர்கள் இருவர் தாங்கள் எடுத்து வந்த டாட்டா ஏஸ் வாகனத்தில் காலி இடத்தில் போட்டு வைக்கப்பட்டிருந்த இரும்பு தளவாடப் பொருட்களை ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு கூடிய கிராம பொதுமக்கள் அவர்களைப்பிடித்து விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக அவர்கள் பேசியதில் இருந்து அவர்கள் மீது சந்தேகம் அடைந்தனர். உடனடியாக அவர்களை ஒரத்தூர் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணை செய்ததில் அவர்கள் அள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த வீரமணி மகன் வெற்றிச்செல்வன் (23), கனகராஜ் மகன் கலைமணி (21) என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவர்களின் மேல் வழக்கு பதிந்து கைது செய்தனர்.
No comments:
Post a Comment