ஆசியக் கண்டத்தில் எங்கும் இல்லாத அளவிலான உயரத்திலும், எழில் மேனியாகவும்1987ல் வடித்தெடுக்கப்பட்டு அழகிய சிற்றம்பலமுடையான் தியான சபையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மேலும் அறம் வளர்த்தநாயகி உடனமர் செம்பொற்சோதிநாதர் மூலவர் சன்னதிகளுடன் பரிவார தெய்வங்களுக்கும், 63 நாயன்மார்களுக்கும், தனி சன்னதிகள்,மனுநீதி மணிமாடமும் நிறுவி தில்லைச்சிதம்பரத்திற்கு நிகராக தினம் ஆறு கால பூஜையுடன் ஆண்டுக்கு 6 மகா அபிஷேகங்களுடன் அனைத்து வழிபாடுகளும் சிறப்புடன் நடந்து வருகிறது.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த ஆலயத்திற்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற வேண்டும் என்றசைவ ஆகம விதிப்படி ஆன்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு ஆலயம் முழுமைக்கும் வண்ணம் பூசி, திருப்பணிகள் புதுப்பொலிவுடன் நிறைவு பெற்றது. இப்பெருவிழா தருமபுர ஆதீனம் 27 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் 24 வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிய பரமாசாரிய சுவாமிகள், திருக்கயிலாய ஸ்ரீ கந்த பரம்பரை சூரியனார் கோயில் ஆதீனம் 28 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள், திருமுதுகுன்றம், திருவண்ணாமலை- துறையூர் ஆதீனம் குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ரத்தின வேலாயுத சிவப்பிரகாச பரமாசாரிய சுவாமிகள் போன்ற சைவ ஆதின தலைவர்களின் நல்லாசியுடன், நூற்றுக்கணக்கான வேத விற்பன்னர்கள்மூலம் வேத மந்திரங்கள் ஓதுவிக்கப்பட்டு16/06/2024 ஞாயிற்றுக்கிழமை காலை7.00-8.00மணிக்குள் இந்த திருக்குட நன்னீராட்டுப் பெருஞ்சாந்திப் பெருவிழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான சிவ பக்தர்களும் பொதுமக்களும் பெருங்கூட்டமாக கலந்து கொண்டு பெருமானை தரிசித்து, விழாவைக் கண்டு களித்து இறையருள் பெற்றனர்.
கலந்து கொண்ட பக்தர்கள் அனைவரும் உச்சரித்த நமசிவாய, சிவாய நம, போன்ற ஐந்தெழுத்துசிவ மந்திர முழக்கம் விண்ணதிர ஒலித்தது. நெய்வேலி நகர சிவபுரம் பகுதியில் வருகை தந்த பக்தர்கள் அனைவருக்கும்ஆங்காங்கே பெரிய அளவில் அன்னதானமும் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment