வடலூரில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்களின் பேரணி மற்றும் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 17 June 2024

வடலூரில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்களின் பேரணி மற்றும் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் வடலூர் பண்ருட்டி சாலையில் உள்ள பள்ளிவாசலுக்கு சொந்தமான இக்த்தா மைதானத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்களின் சிறப்பு தொழுகை நடைபெற்றது பின்னர் வடலூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் வடலூர் பள்ளிவாசல் ஜமாத் தலைவர் பக்ருதீன் சிறப்புரையாற்றினார் அப்பொழுது அவர் பேசுகையில் மத நல்லிணக்கத்தை பறைசாற்றவும் ஏழை எளிய மக்களுக்கு உதவிடவும் தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது இந்நாளில் இஸ்லாமியர்கள் அனைவரும் பிறருக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்யுமாறு கேட்டுக்கொண்டார் நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

No comments:

Post a Comment

*/