புவனகிரி அருகே அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதி கோர விபத்து மூன்று சிறுவர்கள் உட்படபத்துக்கும் மேற்பட்டோர் காயம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 15 April 2024

புவனகிரி அருகே அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதி கோர விபத்து மூன்று சிறுவர்கள் உட்படபத்துக்கும் மேற்பட்டோர் காயம்.


கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே ஆதிவராகநத்தத்தில் சிதம்பரத்திலிருந்து விருத்தாசலம் பகுதியை நோக்கி அரசுப் பேருந்து சென்றுகொண்டிருந்தது . அப்போது பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி நிற்காமல் அருகில் உள்ள குடியிருப்பிலும் மோதி, மின்கம்பங்களையும் சேதப்படுத்தியது. இந்த விபத்தில் வீடுகளின் முன்னால் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த பெரியவர்கள் மற்றும் மூன்று சிறுவர்கள், பேருந்துகளில் இருந்த பயணிகள் உட்படபத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களை மூன்றுக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தற்போது விபத்து ஏற்பட்டுள்ள பகுதி தொடர்ந்து விபத்து நடைபெற்று வரும் பகுதியாக இருந்து வருகிறது. இதுவரை இப்பகுதியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட விபத்துக்கள் இதேபோன்று  ஏற்பட்டுள்ளன.  நெடுஞ்சாலைத்துறை இந்தப் பகுதியில் போதுமான விபத்து தடுப்பு அம்சங்களை இன்னும் கூடுதலாக செய்து தொடர் விபத்துகளை தடுக்க வேண்டும் என்று குடியிருப்பு வாசிகள் மற்றும் இப்பகுதி பொதுமக்கள்கூறுகின்றனர்.

No comments:

Post a Comment

*/