இப்பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர்மட்டம் உயரவும், எப்போதும் தடையில்லாமல் குடிநீர் கிடைத்திடவும் உதவுகிறது. தற்போது கோடை காலத்தில் முற்றிலும் வறண்டு காய்ந்து போய் கிடக்கிறது. எங்கு பார்த்தாலும் கட்டாந்தரையாக இருந்து வருகிறது. இவ்வாறான சூழலில் இந்த ஏரியில் தற்போது கந்தகுமாரன் ஏரிப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், சிறுவர்கள் பொழுதுபோக்காக கிரிக்கெட் விளையாட்டை விளையாடி வருகின்றனர்.
இந்த இளைஞர்கள் எப்போதும் தண்ணீர் நிறைந்து ரம்யமாக காட்சி தரும் வீராணம் ஏரி, தற்போது தண்ணீர் இன்றி வறண்டு கட்டாந்தரையாக மாறிவிட்டது. ஏரிக்குள் இறங்கி ஏரியை கிரிக்கெட் மைதானமாக தினந்தோறும் பயன்படுத்தி வந்தாலும் நாங்கள் சந்தோஷப்படவில்லை. ஏரி முழுமைக்கும் தண்ணீர் நிரம்பி இருப்பது தான் எங்களுக்கு பெருமையான விஷயம். அதனால் எப்போதும் தண்ணீர் நிரம்பி இருக்க ஏரியை முழுவதுமாக தூர்வாரி தண்ணீர் நிரப்ப வேண்டும். அவ்வாறு தண்ணீர் தேக்கினால் விவசாயத்திற்கும் குடிநீர் ஆதாரத்திற்கும் மட்டுமல்லாமல் மேலும் கூடுதலாக சென்னை மக்களின் தாகத்திற்காகவும் தண்ணீர் தர முடியும். கொள்ளுமேடு, நத்தமலை போன்ற ஏரிக்கரையோர கிராமங்களில் வெற்றிலை சாகுபடி நடந்து வருகிறது. ஏரியில் தண்ணீர் வற்றிப் போனதால் வெற்றிலை சாகுபடி முழுமையாக பாதிக்கப்பட்டு அதன் பயிரிடும் நிலபரப்பளவு குறைந்து விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது.
அக்காலத்தில் சோழர்கள் பிற்கால சந்ததிகள் விவசாயம் செழித்து வளமோடு வாழ வேண்டும் என்று நினைத்து மிகவும் சிரமப்பட்டு எந்த ஒரு அறிவியல் விஞ்ஞான கண்டுபிடிப்பு சாதனமும் இல்லாத காலத்தில் மண்வெட்டி, கடப்பாறையை வைத்து மனித சக்தியாலேயே இவ்வளவு பெரிய ஏரியை வெட்டி வைத்திருக்கின்றார்கள். அதை நாம் தூர்வாரி ஆழப்படுத்தி தண்ணீரைத் தேக்கிப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். முக்கியத்துவம் வாய்ந்த இந்த வீராணம் ஏரியை கோடையிலும் நீர் நிரம்பி இருக்கும் அளவுக்கு ஆழப்படுத்தி தூர்வாரித் தர வேண்டும் என்று அரசுக்கு இப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.
No comments:
Post a Comment