இதில் பத்தாயிரம் நிரந்தர தொழிலாளியும், 10,000 ஒப்பந்த தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர், இந்த நிலையில் சுரங்கம் இரண்டில் வீடு, நிலம் கொடுத்த தொழிலாளர்கள் தோட்டக்கலை பிரிவில் நூற்றுக்கு மேற்பட்டோர் குறுகிய கால பணியாளர்களாக கடந்த 10 ஆண்டுகாலமாக பணியாற்றி வருகின்றனர் இந்த நிலையில் அவர்கள் தங்களுக்கு தொடர்ச்சியாக பணி வழங்க கோரியும் சம்பளம் உயர்த்தி தரகோரியும் பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் என்எல்சி நிறுவனம் செவி சாய்க்கவில்லை இந்த நிலையில் அவர்களுடைய பணிக்காலம் இன்னும் ஆறு மாதத்தின் ஒப்பந்தம் முடி வர நிலையில் உள்ளதால் இன்று அவர்கள் என்எல்சி தலைமை அலுவலகம் முன்பு தங்களுக்கு தொடர்ச்சியாக பணி வழங்க கோரியும் சம்பளம் உயர்த்தி தரக் கோரியும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் செய்து வருகின்றனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
- நெய்வேலி செய்தியாளர் வீ.வினோதினி.
No comments:
Post a Comment