ஸ்ரீமுஷ்ணம் அருகே ஆவணம் இல்லாமல் கொண்டு வந்தரூ. 1.50 லட்சம் பணம் பறிமுதல். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 10 April 2024

ஸ்ரீமுஷ்ணம் அருகே ஆவணம் இல்லாமல் கொண்டு வந்தரூ. 1.50 லட்சம் பணம் பறிமுதல்.


கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே ஸ்ரீமுஷ்ணம்- விருத்தாசலம் சாலையில் தேர்தல் பறக்கும் படை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஸ்ரீமுஷ்ணம் வெள்ளாளர் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது செல்வராஜ் எவ்விதமான ஆவணங்களும் இல்லாமல் 1.50 லட்சம் ரூபாய் பணம் வைத்துள்ளதை அறிந்து அதனை பறிமுதல் செய்தனர். உடனடியாக அப்பணம் காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படை குழுவினரால் வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

No comments:

Post a Comment

*/