கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகே புளியந்தோப்பு பகுதி உள்ளது இப்பகுதியில் சுமார் 70 குடும்பங்களை சேர்ந்த மக்கள் சுமார் மூன்று தலைமுறையாக வசித்து வருகின்றனர், வருவாய்த்துறை ஆவணத்தில் புறம்போக்கு நிலமாக உள்ள புளியந்தோப்பு பகுதியை தனியார் கோவில் நிர்வாகத்தின் பெயரில் கடந்த 1994 வருடம் வருவாய் துறை அதிகாரிகள் தங்களது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பட்டா வழங்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் ,சார் ஆட்சியர் மற்றும் குறிஞ்சிப்பாடி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினரும் தற்போதைய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சருமான எம்.ஆர். கே பன்னீர்செல்வம் ஆகியோரிடம் பலமுறை முறையிட்டும் இன்று வரை நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனவும் வீடுகள் அனைத்தும் சேதம் அடைந்துள்ள நிலையில் வீடுகளை சரி செய்ய முயற்சி செய்தால் அதிகாரிகள் வந்து அதனை தடுக்கும் வ மிரட்டி வருகின்றனர் எனக்கூறி கடலூர் விருத்தாச்சலம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட முயன்றனர்.
காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு பின்னர் கலைந்து சென்றனர், இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
- செய்தியாளர் தனுஷ் குறிஞ்சிப்பாடி.

No comments:
Post a Comment