கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையின் 153வது ஜோதி தரிசன பெருவிழா இன்று நடைபெற்றது இதனை முன்னிட்டு தைப்பூச ஜோதி தரிசன விழாவை காண வரும் பக்தர்களுக்கு அதிமுக சார்பில் சிறப்பான மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.
வடலூர் அதிமுக நகர செயலாளர் சி எஸ் பாபு தலைமையில் நடைபெற்ற சிறப்பு அன்னதானத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் கடலூர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான சொரத்தூர் ராஜேந்திரன் அவர்கள் கலந்து கொண்டு மாபெரும் அன்னதானத்தை தொடங்கி வைத்தார், பின்னர் பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. தொடர்ந்து இன்று ஒரு நாள் முழுவதும் காலை மதியம் இரவு என்று மூன்று வேளையும் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வழக்கறிஞர் ராஜசேகர் குறிஞ்சிப்பாடி அதிமுக ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தராஜ், பாஷ்யம், வடலூர் நகர தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் தெய்வக்குமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment