மருத்துவமனை வளாகத்திற்கு உள்ளே ஆபத்தான நிலையில் ஸ்டே கம்பி அறுந்த உள்ள மின் கம்பம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 19 November 2023

மருத்துவமனை வளாகத்திற்கு உள்ளே ஆபத்தான நிலையில் ஸ்டே கம்பி அறுந்த உள்ள மின் கம்பம்.


கடலூர் மாவட்டம் வடலூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் வடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச்  கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பொதுமக்கள் தினமும் சிகிச்சை பெற்றுவதற்கு வந்து செல்கின்றனர்.

இவ்வளாகத்தின் மருத்துவ நிர்வாக அலுவலகம் பின்புறம் கர்ப்பிணி தாய்மார்களுக்கான பிரசவ மற்றும் மகப்பேறு கட்டிடம் இயங்கி வருகின்றது இந்நிலையில் தலைமை அலுவலகத்திற்கு அருகாமையில் பிரசவ வார்டுக்கு செல்லும் வழியில் உள்ள மின்கம்பத்திலிருந்து ஸ்டே கம்பி அறுந்து நீண்ட நாட்களாக ஆபத்தான நிலையில் உள்ளது.


தினமும் நோயாளிகள் அதிக அளவில் வந்து செல்லும் மருத்துவமனையில் பாதுகாப்பாற்ற வகையில் ஸ்டேட் ஒயர் அருந்து தொங்குகின்றது  இதனால் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது, மேலும் விபத்து ஏற்படும் முன் மின்வாரிய அதிகாரிகள் இதன் மீது கவனம் செலுத்தி உடனடியாக சரி செய்ய வேண்டுமென்ற என்ற கோரிக்கை வலுக்கிறது. 

No comments:

Post a Comment

*/