புவனகிரி அருகே வாகன சோதனையில் 14.5 கிலோ ஹான்ஸ் பறிமுதல் இருவர் கைது - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 19 November 2023

புவனகிரி அருகே வாகன சோதனையில் 14.5 கிலோ ஹான்ஸ் பறிமுதல் இருவர் கைது


கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே ஆதிவராகநத்தம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒருவர் இருசக்கர வாகனத்தில்  வைத்திருந்த மூட்டையைப் பற்றி விசாரித்தபோது அவர் சரியாக பதிலளிக்காமல் ஏறுக்குமாறாக பதில் சொன்னதால், அதனை சோதித்துப் பார்த்தபோது அந்த மூட்டையின் உள்ளே வைத்திருந்த 720 சிறிய ஹான்ஸ் பாக்கெட்டுகள் இருந்தன.

அவற்றின் எடைமொத்தம் 14.5 கிலோ இருந்தது. இவற்றின் கொள்முதல் மதிப்பு ரூ. 28,800 எனவும், இவற்றின் விற்பனை விலை சுமார் 50 ஆயிரம் ரூபாய் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. உடனடியாக இருசக்கர வாகனத்தில் ஹான்ஸை எடுத்து வந்த விருத்தாசலம் அருகே உள்ள கார்கூடல் கிராமத்தைச் சேர்ந்த மணவாளன் மகன் மனோஜ் (36) கைது செய்து தொடர்ந்து விசாரணை செய்தனர்.


அதில் ஹான்ஸை வாங்கி விற்பனை செய்து வரும் பி. முட்லூரைச் சேர்ந்த மணிகண்டன் (35) என்பவரையும்  போலீசார் கைது செய்தனர்.  இருவருடமிருந்து ஹான்ஸ் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு ஸ்கூட்டி வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். 

No comments:

Post a Comment

*/