கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே பாளையங்கோட்டையில் வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது, இதில் அனைத்து வீடுகளிலும் குறுக்கே வைக்கப்பட்டிருந்த நடைபாதை பாலத்தை அகற்றிய நிலையில் பாளையங்கோட்டை வடக்கு தெருவில் வசிக்கும் அன்பழகன் என்பர் என்பவர் மகன் வினோத் என்பவர் மட்டும் தனது வீட்டின் முன்னால் அமைக்கப்பட்ட சிறு நடைபாதையை அகற்ற மறுக்கிறார்.
அதில் சிறிய சிமெண்ட் பைப் பொருந்தி இருப்பதால் தண்ணீர், சீராக வெளியாகாமல் கழிவு நீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் கழிவுநீர் புகும் அபாயம் உள்ளது, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கிராம மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment