கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் சென்னை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான வளைவில் பாண்டிச்சேரியில் இருந்து வந்த சொகுசு கார் ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தது அப்போது ஓட்டுனரின் தூக்க கலக்கத்தால் சாலையில் சென்றகார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த கருவேலமர புதருக்குள் பாய்ந்து விபத்து ஏற்பட்டது.
இதில் காரில் ஓட்டுனரைத் தவிர வேறு யாரும் இல்லை.. ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். விபத்துக் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஆபத்தான வளைவு மற்றும் குடியிருப்பு பகுதியில் உள்ள சாலைகளில் விபத்து தடுப்பு இரும்பு பட்டையை பொருத்தாததால்தான் இதுபோன்ற விபத்துக்கள் அதிகம் ஏற்பட்டு வருவதாகவாகன ஓட்டிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.
No comments:
Post a Comment