கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வாக்கூர் கிராமத்தில் சிதம்பரம்- சேத்தியாத்தோப்பு செல்லும் மாநில நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையில் சில மாதங்களுக்கு முன்பு சாலை பராமரிப்புப் பணியில் சுமார் 12 கிலோமீட்டர் தூரம் வரை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது பராமரிப்புப் பணியின் போது புதிய சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையில் வாக்கூர் கிராமப் பகுதியில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள சாலைப் பணி இன்னும் முடிக்காமல் கிடப்பில் உள்ளது.
இது நீண்ட நாட்களாக இருந்து வருவதால் சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து வாகன ஓட்டிகள், கிராம மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என பலரும் கடும் சிரமத்தையடைந்து வருகின்றனர். கிடப்பிலிருக்கும் இந்த சாலைப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என நெடுஞ்சாலைத் துறையினரிடம் கோரிக்கை வைத்தாகக் கிராமத்தினர் கூறு கின்றனர். இதனால் தினந்தோறும் ஜல்லியில் சறுக்கி விழுந்து அடிபடுவது வழக்கமாகி வருகிறது.
உடனடியாக கிடப்பில் இருக்கும் சாலைப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்பதே இக்கிராமத்தினரின் அவசியமான கோரிக்கையாக உள்ளது.
No comments:
Post a Comment