இதில் மாவட்ட இளையோர் அலுவலர் தெய்வசிகாமணி வரவேற்புரை ஆற்றினார். கடலூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் மாவட்ட மேற்பார்வையாளர் கதிரவன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் உணவு திருவிழாவின் ஸ்டாலினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் .மேலும் இது குறித்த சிறுதானிய விழிப்புணர்வுகளை பொதுமக்களிடம் எடுத்து கூறினார். மேலும் சிறுதானிய பயன் குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடமும் மாணவ மாணவிகளிடம் வழங்கினார்.
நிகழ்ச்சியின் நிறைவாக கணக்கு மற்றும் நிகழ்ச்சி உதவியாளர் புஷ்பலதா நன்றி கூறினார், நிகழ்ச்சியில் தேசிய இளையோர் தொண்டர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நேரு யுவ கேந்திராவின் நிர்வாக உதவியாளர் (ஓய்வு) ராமமூர்த்தி செய்திருந்தார்.
No comments:
Post a Comment