கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள அரசு மருத்துவமனை எதிரில் DYFI சார்பில் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் ஜெ. சிவலோகம் தலைமையில் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் கடந்த மாதம் 26 ஆம் தேதி தலித் மக்கள் குடிக்கும் தண்ணீரில் மலத்தை கலந்த கயவர்களை கைது செய்யாத காவல்துறை கண்டித்தும் தீண்டாமையை அடையாளமாக இருக்கிற குடிநீர் தொட்டியை இடிக்க வலியுறுத்தி இன்றைய தினம் DYFI சார்பில் போராட்டம் நடத்த சென்ற தோழர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்கிற பெயரில் கைது செய்த காவல்துறை கண்டித்தும் கைது செய்யப்பட்ட வாலிபர் சங்க தோழர்களை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் மாவட்டதலைவர் க.சின்னதம்பி மாவட்ட குழு உறுப்பினர் தியாகு மற்றும் பொதுமக்கள் பலரும் இதில் கலந்துகொண்டு கண்டன கோஷம் எழுப்பினார்கள்
சாதிக் அலி செய்தியாளர்

No comments:
Post a Comment