சேத்தியாத்தோப்பில்கரும்பு விவசாயிகள், விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 22 January 2023

சேத்தியாத்தோப்பில்கரும்பு விவசாயிகள், விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

சேத்தியாத்தோப்பில்கரும்பு விவசாயிகள், விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.



கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில்  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய விவசாயிகள் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடைபெற்து.


இதில் தஞ்சாவூர் திருமண்டங்குடி, கடலூர் மாவட்டம் ஏ.சித்தூர் திருஆரூரான் சர்க்கரை ஆலைகளின் முன்பாக கரும்பு விவசாயிகள் கடந்த 50 நாட்களுக்கு மேலாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரும்பு விவசாயிகளின் பிரச்சனையில் தமிழக  அரசு தலையிடாமல் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பதாக குற்றச்சாட்டும் வைக்கப்பட்டது. மேலும் மேற்கண்ட சர்க்கரை ஆலைகளின்


முதலாளிகள் விவசாயிகள் பெயரில் 200கோடி கடன் பெற்றுள்ளதை தன்  கணக்கில் ஏற்றுக் கொண்டு விவசாயிகளை கடன்சுமையிலிருந்து விடுவிக்க வேண்டும், கரும்பு கிரையத்தொகையில் 50 கோடி பிடித்தம் செய்ததை வங்கியில் விவசாயிகள் பயிர்கள் கடனில் செலுத்திட வேண்டும், கரும்பு டன் ஒன்றுக்கு 4000 ரூபாய் வழங்க வேண்டும்

உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், திமுக அரசும், துறை சார்ந்த அமைச்சரும் கரும்பு விவசாயிகளின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும், பஞ்சாப் மாநில அரசு ரூ. 3800 அறிவித்துள்ளதைப் போல பங்கிட்டு முறை சட்டத்தை ரத்து செய்து SAPவழங்க வேண்டும்,கரும்பு வெட்டுக்கூலியை ஆலையே ஏற்க வேண்டும், கரும்பு சுமை வாகனங்களை எடை போட்டு உள்ளே அனுப்ப வேண்டும். இது போன்ற கோரிக்கைகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் வைக்கப்பட்டது. 


இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைவர் அண்ணாதுரை செயலாளர் ரெங்கசாமி பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, நிர்வாகக் குழு உறுப்பினர் ஆதிமூலம், மாவட்ட துணை தலைவர் கற்பனைச் செல்வம், மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட துணை தலைவர் மூர்த்தி, புவனை விவசாய சங்க செயலாளர் காளி கோவிந்தராசு மற்றும் கரும்பு விவசாயிகள், விவசாய சங்கத்தினர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

*/