சிதம்பரம் அண்ணாமலை நகர் பள்ளியில் தேசிய பெண் குழந்தைகள் தினம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 25 January 2023

சிதம்பரம் அண்ணாமலை நகர் பள்ளியில் தேசிய பெண் குழந்தைகள் தினம்

சிதம்பரம் அண்ணாமலை நகர் பள்ளியில் தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.


சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கமும் சிதம்பரம் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கமும் இணைந்து  அண்ணாமலை நகர், இராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளியில் தேசிய பெண் குழந்தைகள் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் அண்ணாமலைப் பல்கலைக்கழக உளவியல் துறை பேராசிரியர் மற்றும் முனைவர் ஆர். நீலகண்டன் பள்ளியின் மாணவிகளுக்கு உளவியல் சார்ந்த ஆலோசனைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 



இந்நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி.பியர்லின் வில்லியம்ஸ் வரவேற்று பேசினார். சிதம்பரம் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கத்தின் செயலாளர் முனைவர் எச். மணிகண்டன் முன்னிலை வகித்து மாணவிகளுக்கு ஆலோசனைகளையும் வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியைகள் பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகள் 60 பேர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். மாணவிகள் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது சந்தேகங்களையும் தேவைகளையும் தெரிவித்து தெளிவு பெற்றனர்.நிகழ்ச்சியின் நிறைவில் சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்க செயலாளர் முனைவர்  க. சின்னையன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

*/