கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட காவனூர் கள்ளிப்பாடி இடையே பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் கல்லூரி மாணவர்கள் நலன் கருதி பருவ மழை காலத்தில் ஆற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் காவனூரில் உள்ள பொதுமக்கள் மருத்துவமனை தாலுக்கா அலுவலகம் ஒன்றிய அலுவலகம் வந்து செல்ல சுமார் 40 கிலோ மீட்டர் சுற்றிவரும் அவல நிலையால் பொதுமக்கள் நலன் கருதி காவனூர் கள்ளிப்பாடி இடையே மேம்பாலம் விரைவில் கட்டித் தரும்படி கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் கடலூர் மேற்கு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி சார்பாக கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் மருதை தலைமையில் கடலூர் மாவட்ட ஆட்சியாளர் அவர்களுக்கு மனு கொடுக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் முருகன் மாவட்ட பொருளாளர், மாவட்ட கல்வியாளர்கள் தலைவர் ராஜா ஒன்றிய தலைவர் வடமலை, ஒன்றிய தலைவர் சின்னதுரை லோகு பாண்டி, மாவட்ட ஊடகத் தலைவர் பிரபாகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பூண்டி செந்தில் கார்த்திகேயன் தினேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்
No comments:
Post a Comment