கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த சாத்துக்குடல் கீழ்பாதி கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்கள் வசித்து வருகின்றனர்.இந்த நிலையில் கடந்த காணும் பொங்கல் அன்று கிராமத்தில் கலை நிகழ்ச்சி விளையாட்டு போட்டி ஆகியவை ஏற்பாடு செய்து நடைபெற்றுக் கொண்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில் பங்கு பெறும் மாணவ மாணவிகளுக்கு பரிசு பொருள் வாங்குவதற்காக, சாத்துக்குடல் கீழ்பாதி பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் மகன் சிவசங்கர்,கோதண்டம் மகன் ஹரி கிருஷ்ணன்,ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் சாத்துக்குடல் கீழ்ப்பாதியில் இருந்து விருத்தாசலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர் அப்பொழுது ஆலிச்சிக்குடி கிராமத்தில் அருகே சென்று கொண்டிருந்த பொழுது, அங்கு கூடியிருந்த (வன்னியர் சமூகம்) இளைஞர்கள் வாகனத்தை இந்த சாலையில் செல்லக்கூடாது என வழிமறித்து தகராறு செய்துள்ளனர்.
சிவசங்கர்,ஹரி கிருஷ்ணன்,ஆகிய இருவரும் விருத்தாச்சலம் சென்று பரிசு பொருட்களை வாங்கிக் கொண்டு திரும்பி அதே வழியில் மீண்டும் வரும்பொழுது, 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பட்டியல் இனத்தைச் சார்ந்த சிவசங்கர்,ஹரி கிருஷ்ணன்,ஆகிய இருவரையும் சாதி பெயரை சொல்லி பயங்கர ஆயுதங்களால் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது,உடனே அங்கு வந்த சாத்துக்குடல் கீழ்பாதி கிராமத்தைச் சார்ந்த தவமணி மகன் பாலமுருகன்,சாமிதுரை மகன் சிவா என்கிற அறிவுடை நம்பி,அவர்கள் இருவரையும் தடுக்க முற்பட்ட போது பாலமுருகன் சிவா என்கிற அறுவுடை நம்பியையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த நான்கு பேரும் விருத்தாசலம் அரசு மருத்துவமனைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் இது குறித்து விருத்தாசலம் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
இச்சம்பத்தில் கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் சக்தி கணேஷ் நேரில் சென்று பார்வையிட்டார் அதனை தொடர்ந்து காயம் பட்ட மாணவன் சிவசங்கர் அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், மீதி சம்பவத்தில் ஈடுபட்ட கிராமத்தில் ஏழு பேர் மீது வன்கொடுமை தடுப்பு திட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த நிலையில் பரமசிவம் த/பெ கதிர்வேல், மணிகண்டன் த/ பெ பரமசிவம் ஆகிய இருவரையும் விருத்தாசலம் காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும் ஐந்து நபர்களை கைது செய்ய வேண்டும் எனவும் இச்சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான இரண்டு நபர்களை கைது செய்து வழக்கு பதிய வேண்டும் என அக்கிராமத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் மக்கள் விருத்தாசலம் பாலக்கரையில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே காவல்துறையை கண்டித்து கோஷமிட்டு அதன் பின்பு ஊர்வலமாக சார ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர், தகவல் அறிந்து வந்த சார் ஆட்சியர் பழனி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்படும் என உறுதி அளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.
இந்நிகழ்ச்சிக்கு விடுதலை சிறுத்தை ஒன்றிய துணை செயலாளர் பாஸ்கர் தலைமை தாங்கினார். மேலும் ஒன்றிய பொருளாளர் சக்திவேல் நகர செயலாளர் முருகன் தொகுதி செயலாளர் ஐயாயிரம் ஆதி அறக்கட்டளை நிறுவனர் திருமாறன் ஒன்றிய துணை செயலாளர் தென்றல் ஒன்றிய நிர்வாகி அய்யாதுரை ஒன்றிய செயலாளர் சுப்பு ஜோதி ஒன்றிய பொருளாளர் எழில்வான் சிறப்பு ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தலிங்கம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கண்ணன் ஆகியோர் உட்பட விசிக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment