விருத்தாசலம் அடுத்த ஆலிச்சிக்குடி கிராமத்தில் தேசிய ஊரக 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இலவச கண் சிகிச்சை சிறப்பு முகாம்..
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த ஆலிச்சிக்குடி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும், பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் நடைபெற்ற முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் சின்னபிள்ளை பெருமாள் தலைமையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.முகாமில் விருத்தாசலம் நடமாடும் மருத்துவ குழு மருத்துவர் டாக்டர் லாவண்யா,100 நாள் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களின் கண்களை பரிசோதித்து சிகிச்சை அளித்தார்.
திட்ட ஊரக வளர்ச்சி அலுவலர் தண்டபாணி சுகாதார ஆய்வாளர் கார்த்திக் மங்கலம்பேட்டை வட்டார வள மருத்துவ மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் மக்களைத் தேடி மருத்துவக் குழு பணியாளர் பாரதி, கவியரசி திட்டப்பணியாளர் பழனிச்சாமி சாஸ்தா குழும சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment