விருத்தாசலத்தில் JCI VRIDHACHALAM FIVE TOWERS சார்பில் மாசற்ற குழந்தைகள் தின விழா - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 29 December 2022

விருத்தாசலத்தில் JCI VRIDHACHALAM FIVE TOWERS சார்பில் மாசற்ற குழந்தைகள் தின விழா

விருத்தாசலத்தில் JCI VRIDHACHALAM FIVE TOWERS சார்பில்  மாசற்ற குழந்தைகள் தின விழா நடைபெற்றது.


விழாவிற்கு கிளை இயக்கத்தின் தலைவர் முரளி தலைமை வகித்தார். SMA மண்டல ஒருங்கிணைப்பாளர் JC.HGF.மணிகண்டன் மற்றும் மண்டல இயக்குனர் சத்யராஜ் முன்னிலை வகித்தனர்.


நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விருதாச்சலம் நகர மன்ற தலைவர் மருத்துவர் சங்கவி முருகதாஸ் அவர்கள் கலந்துகொண்டு  குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினார்.


கௌரவ விருந்தினராக தனலட்சுமி சிட்பண்ட்ஸ் முதுநிலை வளர்ச்சி அதிகாரி அன்பழகன் மற்றும் ஏ கே சமூக நல அறக்கட்டளை நிறுவனர் வழக்கறிஞர் அகிலன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மண்டல இயக்குனர் JC.HGF. மணிவண்ணன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் பரதம், சிலம்பம், நடனம், பேச்சுப்போட்டி, ஓவிய போட்டி என ஆர்வமாக கலந்து கொண்டனர்.


விழாவில் துணைத் தலைவர்கள் ராஜேஷ், சத்தீஸ்வரன், சட்ட ஆலோசகர் ரவிச்சந்திரன், இயக்குனர்கள் கிருஷ்ணராஜ், வேல்முருகன் இனைச் செயலாளர் ராஜசேகரன் கலந்து கொண்டனர்.செயலாளர் மாதவன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

*/