ஆர் டி ஒ தலைமையில் அமைதி பேச்சு வார்த்தை - அனைத்துக் கட்சித் தலைவர்கள் ரயில்வே அதிகாரிகள் பங்கேற்பு - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 28 December 2022

ஆர் டி ஒ தலைமையில் அமைதி பேச்சு வார்த்தை - அனைத்துக் கட்சித் தலைவர்கள் ரயில்வே அதிகாரிகள் பங்கேற்பு

ஆர் டி ஒ தலைமையில் அமைதி பேச்சு வார்த்தை - அனைத்துக் கட்சித் தலைவர்கள் ரயில்வே அதிகாரிகள் பங்கேற்பு



இன்று மாலை 5 மணிக்கு கடலூர் ஆர் டி ஓ  அலுவலகத்தில் ஆர்டிஓ தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் குடியிருப்போர் சங்கம் புதுநல அமைப்புகளின் சார்பில் டிசம்பர் 30 அறிவிக்கப்பட்டு இருந்த ரயில் மறியல் போராட்டத்தையொட்டி அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது



மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கோ மாதவன் இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட தலைவர் திலகர் மாநில துணைத்தலைவர் வழக்கறிஞர் சந்திரசேகரன் குடியிருப்போர் சங்க பொதுச் செயலாளர் மருதவாணன் திராவிட கழக மாவட்ட செயலாளர் சிவக்குமார் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ரஹீம் மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் பாலு அனைத்து பொது நல அமைப்புகளின் தலைவர் ரவி தனியார் பேருந்து தொழிலாளர் சங்க தலைவர் பண்டரிநாதன் குடியிருப்போர் சங்க தலைவர்கள் தேவநாதன் பாலு பச்சையப்பன் இந்திய தேசிய காங்கிரஸ் ரமேஷ் கோபால்  உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.


ரயில்வே டிவிஷனல் இன்ஜினியர் குலசேகரன் போக்குவரத்து ஆய்வாளர் பிரபாகரன் முதுநிலை பொறியாளர் விஜய் சுந்தரம் ரயில்வே காவல்துறை ஆய்வாளர் வினோத்குமார் காவல்துறை ஆய்வாளர் அருண்குமார் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.



கடலூர் மாவட்டத்தின் தலைநகரமான கடலூரில் கொரானா  ஊரடங்கு பிறகு ரயில்கள் இயக்கப்பட்ட பின் கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் நின்று சென்ற மன்னார்குடி (16179,  16180),    காரைக்கால் விரைவு ரயில்கள் (16175, 16176) தற்போது நிற்பதில்லை. இதனால் இரவு நேரத்தில் சென்னை செல்லும் பயணிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். எனவே மீண்டும் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.


ராமேஸ்வரம்  எக்ஸ்பிரஸ்   (16852),     உழவன் எக்ஸ்பிரஸ் ( 16865, 16866) திருப்பதி 16780 வண்டிகளும் கடலூர் துறைமுகம் சந்திப்பு ரயில் நிலையத்தில் நின்று செல்வதற்கு ஏற்பாடு செய்திட வேண்டும்.


கன்னியாகுமரி புதுச்சேரி (16862), மஹால் எக்ஸ்பிரஸ் (22623/22624) திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் ரயில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.  (06121/06122) சேலம் விருதாச்சலம் விரைவு ரயில் கடலூ துறைமுக சந்திப்பு வரை நீட்டிக்க வேண்டும்.  மயிலாடுதுறையில் இருந்து கோவை வரை இயக்கப்படும் ஜனசதாப்தி (12083/12084) விரைவு ரயில் கடலூர் துறைமுக சந்திப்பு வரை நீட்டிக்க வேண்டும்.
மயிலாடுதுறை இருந்து மைசூர்க்கு இயக்கப்படும்விரைவு ரயில் (16231, 16232) கடலூர் துறைமுகம் சந்திப்பு வரை நீட்டிக்கவும் விழுப்புரம் தாம்பரம் பாசஞ்சர் துறைமுகம் சந்திப்பு வரை நீட்டிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். 


கடலூர் - புதுவை - சென்னை  இருப்பு பாதை திட்டத்தை உருவாக்கிட வேண்டும். 


திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் முழுவதும் மேல் கூரை வசதி, குடிநீர், கழிப்பிடம், பயணிகள் தங்கும் ரூம், மாற்றுத்திறனாளிகள் முதியவர்கள் எளியதாக வந்து செல்வதற்கு வசதிகள்,  கடலூர் துறைமுக சந்திப்பில் சைக்கிள் ஸ்டாண்ட் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உருவாக்கிட வேண்டும்.  முதியோருக்கு வழங்குப்பட்டு வந்த சலுகைகள் மீண்டும் அமலாக்கிட வேண்டும்.  மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. 


ரயில்வே பொறியாளர்கள் கோரிக்கைகள் சம்பந்தமாக ரயில்வே நிர்வாகத்தில் தெரிவித்து தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்கள்


அனைத்து கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் ரயில்வே போர்டு உறுப்பினர் கலந்து கொள்ளக்கூடிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது



இந்நிலையில்மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துக் கட்சிகளின் சார்பில் வரும் டிசம்பர் – 30 அன்று  நடைபெற இருந்த  ரயில் மறியல் போராட்டம் ஜனவரி 10ஆம் தேதி அன்று காலை 10 மணிக்கு திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. 

ரயில் மறியல் போராட்டத்தில் அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைத்து கட்சி மாநிலதலைவர்களை பங்கேற்க ஏற்பாடு செய்வதென பின்னர் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது


மறியல் போராட்டத்திற்கு அனைத்து கட்சிகள், வர்த்தக அமைப்புகள், ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்கள் உள்ளிட்ட அனைத்து பகுதி மக்களும் ஆதரவு அளிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர்

No comments:

Post a Comment

*/