நரிக்குறவர் சமூக மாணவர்களுக்கு போதை பொருளின் தீமைகள் குறித்த கருத்தரங்கம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 26 December 2022

நரிக்குறவர் சமூக மாணவர்களுக்கு போதை பொருளின் தீமைகள் குறித்த கருத்தரங்கம்

நரிக்குறவர் சமூக  மாணவர்களுக்கு போதை பொருளின் தீமைகள் குறித்த கருத்தரங்கம் நடத்தி ஸ்மீட் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது!!


கடலூர் மாவட்டம், கீரப்பாளையம் ஒன்றியதிற்கு உட்பட்ட  நரிக்குறவர் குடியிருப்பில் சீராளன் நினைவு கல்வி அதிகார அறக்கட்டளை சார்பாக கிருஸ்துமஸ் தினம், மற்றும் தந்தை பெரியார் அவர்களின்45 வது  நினைவு தினத்தை முன்னிட்டு   ஸ்மீட் பவுண்டேஷன்  சார்பாக நரிக்குறவர் பகுதியில்  இயங்கி வரும் ஜெய் பீம்  இரவு பாடசாலை மாணவர்களுக்கு  போதை பொருட்களின் தீமைகளை எடுத்துரைக்கும் விதமாக "நம் முப்பாட்டன் அம்பேத்கர் மது அருந்தியதில்லை" என்ற தலைப்பில் வழிப்புணர்வு கருத்தரங்கம் ஏழை எளிய  நரிக்குறவர் சமூக மாணவர்களின் எதிர்கால கல்வி வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஒருங்கிணைக்கப்பட்டது

  

இந்த நிகழ்வில் சீராளன் நினைவு கல்வி  அதிகார அறக்கட்டளையின் நிறுவனர் பேராசிரியர் டாக்டர்.ஜோதிமணி சீராளன் அவர்கள் கலந்து கொண்டு போதைப் பொருட்கள் எத்தகைய அளவு சமூகத்தை பாதிப்புக்கு கொண்டு செல்கின்றது. என்பதை பற்றி நரிக்குறவர் சமூகத்தைச் சார்ந்த, ஏழை எளிய மாணவர்களுக்கு கருத்துரைகளை எடுத்துரைத்து அவர்களுக்கு கல்விக்கு தேவையான கல்வி உதவிகளை வழங்கினார். 



இந்த நிகழ்வில் கிராமத்தைச் சார்ந்த சமூக செயற்பாட்டாளர்கள் அருணன், ராஜாங்கம், அன்புக்கரசு, தேவன்,நவீண்குமார் பலராமன், ஆகியோரும் கிராமத்தை சேர்த்த பெரியோர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்கள்.

No comments:

Post a Comment

*/