பரங்கிப்பேட்டை அருகே தீ விபத்து – கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ நிவாரணம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 24 December 2022

பரங்கிப்பேட்டை அருகே தீ விபத்து – கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ நிவாரணம்

பரங்கிப்பேட்டை அருகே தீ விபத்து – கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ நிவாரணம் வழங்கினார். 


சிதம்பரம் சட்டமன்ற தொகுதி, பரங்கிப்பேட்டை பேரூராட்சி, டெல்லி காகிப் தர்கா தெருவை சேர்ந்த சுந்தரம் என்பவரது கூரை வீடு, மின் கசிவு காரணமாக நேற்று தீப்பிடித்து, எரிந்து முற்றுலும் சேதமடைந்தது. பாதிக்கப்பட்ட சுந்தரம் குடும்பத்தினருக்கு கடலூர் கிழக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாவட்ட கழக செயலாளர் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரணம் உதவிகளை வழங்கினார்.


அப்போது முன்னாள் அமைச்சர் செல்வி இராமஜெயம், பரங்கிப்பேட்டை ஒன்றிய கழக செயலாளர் கோவி.ராசாங்கம், குமராட்சி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் வை.சுந்தரமூர்த்தி, பரங்கிப்பேட்டை நகர செயலாளர் மாரிமுத்து, கிள்ளை நகர கழக செயலாளர் தமிழரசன், பரங்கிப்பேட்டை கூட்டுறவு வங்கி தலைவர் ஜெ.வசந்த், ஒன்றிய அவைத் தலைவர் ரெங்கசாமி,   நிர்வாகிகள் மலைமோகன், சந்தர்ராமஜெயம், ஷாஜகான், சம்மந்தம், இக்பால்,  ஜெய்சங்கர், சங்கர், சக்கரவர்த்தி, சிவகுமார், காமில் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

*/