திருமுட்டத்தில் விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 21 December 2022

திருமுட்டத்தில் விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்


திருமுட்டத்தில் விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம்

கடலூர் மாவட்டம் திருமுட்டத்தில் கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக திமுக அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அதிமுக நகரச் செயலாளர் பூமாலைகேசவன் தலைமையில் நடைபெற்றது.



இதில் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், சிதம்பரம் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான கே. ஏ.பாண்டியன் , கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான முருகுமாறன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கானூர் பாலசுந்தரம், முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், தலைமை கழக பேச்சாளர் தில்லை கோபி ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.


கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர்.


கடந்த அதிமுக ஆட்சியில் நான்கரை ஆண்டுகள் நல்லாட்சி தந்தவர் அண்ணன் எடப்பாடியார். விவசாயிகள், குடும்ப தலைவிகள், பள்ளி மாணவர்கள் என அனைவருக்குமான திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தினார்.


இன்று 18 மாத ஆட்சியில்  திமுக அரசு விளம்பரம் தேடும் அரசாக இருந்து வருகிறது. அதிமுக கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் தற்போது புதிய ஸ்டிக்கர் ஒட்டி தன்னை விளம்பரப்படுத்திக் கொள்கிறது.


அன்று பொங்கல் பரிசு தொகை 5,000 வழங்க வேண்டும் என்று கூறிய தற்போதைய திமுக அரசின் முதல்வர்


 அன்று சொன்னதை இன்று செய்ய வேண்டும்.ஏழை எளிய குடும்பங்களுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு குடும்பத்திற்கு ₹5000 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்க வேண்டும். எதற்கும் திறனற்ற திமுக அரசின் முதல்வரை வீட்டுக்கு அனுப்பிவிட்டு வருகின்ற தேர்தலில் அதிமுகவிற்கு மக்களின் ஆதரவால்  பாராளுமன்றத் தேர்தலில் அனைத்து இடங்களிலும் அதிமுக வெற்றி பெறும், அடுத்த சட்டசபை தேர்தலில் அண்ணன் எடப்பாடியார் வெற்றி பெற்று தமிழக முதல்வராவதை  யாராலும் தடுக்க முடியாது என கே.ஏ. பாண்டியன் பேசினார் ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய பெருந்தலைவர், ஒன்றிய கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என திரளானவர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

*/