விருத்தாச்சலம் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நெடுஞ்சாலை துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 20 December 2022

விருத்தாச்சலம் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நெடுஞ்சாலை துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

விருத்தாச்சலம்  பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நெடுஞ்சாலை துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம். 



கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பேருந்து நிலையம் அருகில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஜங்ஷன் சாலையில் நெடுஞ்சாலைத் துறையின் மூலமாக சாலை விரிவாக்கம் மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் பணியானது ஆலடி சாலையில் இருந்து பேருந்து நிலையம் வரை ஆக்கிரமிப்புகளை அகற்றாமலேயே சாலையை விரிவாக்கம் செய்யாமல்  அப்படியே சாலை அமைக்கப்படுவதால் அந்தப் பகுதி மிகவும் குறுகலாக காணப்படுவதுடன் பேருந்துகள் வந்து செல்வதற்கு சிரமத்துக்குள் ஆகிறது. இதனால் விபத்துக்கள் ஏற்படும் நிலையும் உள்ளது. எனவே சாலையை ஆக்கிரமித்து கட்டி  கட்டிடங்களை அகற்றிவிட்டு சாலையை விரிவாக்கம் செய்து கழிவுநீர் வாய்க்கால் அமைக்க கோரி விருத்தாசலம் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் ஒப்பந்ததாரரை கண்டித்து கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 


இந்த ஆர்ப்பாட்டத்தில் வெளிநாடு வாழும் இந்தியர் மற்றும் வெளி மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்ட துணை தலைவர் ஜெயராமன், மாவட்ட செயலாளர் செல்வராஜ், கலை கலாச்சார பிரிவு நாராயணன், ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், ராமமூர்த்தி, முருகன், பார்த்திபன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதிங ஏராளமான மாவட்ட ,நகர, ஒன்றிய, பாரதிய ஜனதா கட்சியினர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/