கடலூர் கிழக்கு மாவட்டம் பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் ஆளும் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 18 December 2022

கடலூர் கிழக்கு மாவட்டம் பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் ஆளும் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

கடலூர் கிழக்கு மாவட்டம் பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் ஆளும் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.


கடலூர் கிழக்கு மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் அதிமுக சார்பில் நகர செயலாளர் மாரிமுத்து தலைமையில் ஆளும் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் பரங்கிப்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் வசந்த் வரவேற்றார் இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே ஏ பாண்டியன் ஆளும் திமுக அரசை கண்டித்து பால் விலை மின் கட்டண உயர்வு சொத்துவரி போன்றவற்றை கண்டித்து கண்டன உரையாற்றினார்.


நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் கோவி ராசாங்கம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திருமாறன் பரங்கிப்பேட்டை பேரூராட்சி கவுன்சிலர்இந்துமதி சந்தர் தலைமைக் கழக பேச்சாளர் தில்லை செல்வம் பரங்கிப்பேட்டை ஒன்றிய கவுன்சிலர் சுதாகர் கொத்தட்டை ஊராட்சி மன்ற தலைவர் ரங்கசாமி மீனவ பிரிவு செயலாளர் வீராசாமி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/