வடலூர் கண்ணுத்தோப்பு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தொங்கும் பழைய பாலத்தால் விபத்துகள் ஏற்படும் அபாயம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 20 November 2022

வடலூர் கண்ணுத்தோப்பு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தொங்கும் பழைய பாலத்தால் விபத்துகள் ஏற்படும் அபாயம்.

வடலூர் கண்ணுத்தோப்பு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தொங்கும் பழைய பாலத்தால் விபத்துகள் ஏற்படும் அபாயம்.


கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தாலுக்கா உட்பட்ட வடலூர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில்  கனண்ணுதோப்பு பாலம் அமைந்துள்ளது இந்த பாலம் மிகவும் பழமை வாய்ந்த குறுகிய பாலம் தற்போது தொங்கும் பாலமாகவும் பாலத்தின் இருபுறமும் தடுப்பு கட்டை இல்லாமலும் சாலை நடுவே குண்டும் குழியுமாகவும் காட்சியளித்து வருகின்றது இந்த வழியாக தினசரி ஆயிரக்கணக்கான கனரக இலரக  வாகனங்களும் மற்றும் பயணிகளை ஏற்றி செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அதிக அளவில் கடந்து வருகின்றது இந்த பழமை வாய்ந்த பாலத்தின் வழியாக பேருந்தில் பயணிக்கும் பயணிகள் மற்றும் இரு சக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டு வருவோர் உயிரை கையில் பிடித்துக் கொண்டு பாலத்தை கடந்து வருகின்றனர்.


அந்த இடத்தில் பேருந்தில் பயணிக்கும் போது இதயத்தில் இடி விழும் அளவிற்கு அதிர்வலைகள் ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர் மிகவும் பழமை வாய்ந்த பாலம் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்களும் இலகுரக வாகனங்களும் பேருந்துகளும் தினமும் இந்த பாலத்தை மரண பயத்துடன் கடந்து செல்கின்றது


இது மிகவும் குறுகிய பாலம் என்பதால் பல முறை பல வாகனங்கள் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துகள் ஏற்பட்டு உயிர் பலிகள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆகவே இந்த தேசிய நெடுஞ்சாலையை சில வருடங்களாக ஆமை வேகத்தில் சுறுசுறுப்புடன் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது அனைவரும் அறிந்ததே தற்போது விரிவாக்க பணி முடிவடைய இன்னும் சில வருடங்கள் கூட ஆகலாம் அதற்குள் இந்த தொங்கும் பாலத்தில் கனரக இலகுரக பேருந்துகள் கவிழ்ந்து பல்வேறு விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் பலிகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக சமூக ஆர்வலர்களும் வாகன ஓட்டிகளும் புகார் தெரிவிக்கின்றனர்.


மாற்றுப் பாலம் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் நிலையில் உடனடியாக மாற்றுப் பாதை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இந்த கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது

No comments:

Post a Comment