சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 19 October 2022

சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது



மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டதால் கடலூர் மாவட்டம்  சிதம்பரம் அருகே உள்ள  கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமங்களில் வெள்ளம் நீர் சூழ்ந்தது குண்டலபாடி பெராம்பட்டு ஜெயங்கொண்ட பட்டினம் திட்டுக்காட்டூர் பகுதிகளில் குடியிருப்பு வீடுகள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டன.


நீரின் அளவு மேலும் அதிகரிப்பதால் அச்சத்தில் உள்ள மக்கள் மேலும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் பள்ளி மாணவர்கள் தினமும் பள்ளிக்கு செல்ல படகில் சவாரி செய்து பள்ளிக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது தன் அன்றாட வாழ்க்கைக்கு வெளியில் செல்லாமல் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் வெளியில் செல்ல படகு மூலம் சவாரி செய்து தான் சென்று வருகின்றனர்.


ஏற்கனவே வெள்ளத்தில் இருந்து மீண்டு வந்த நிலையில் மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விட்டாலே அடிக்கடி வெள்ளம் வருவதால் தற்போது வசித்து வரும் பகுதியில் இருந்து வேற ஒரு பகுதிக்கு செல்லலாமா என்று தாக்கத்தில் உள்ள  கிராம மக்கள் தண்ணீரில் விஷ ஜந்துக்கள் முதலைகள் இருப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.


மேலும் அரசனாது இதை கவனத்தில் எடுத்து எங்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் பாதுகாப்பு நிவாரணம் வழங்கு கோரி பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment