கடலூரில் அண்ணாமலையின் உருவ பொம்மை எரிப்பு; திமுகவினர் ஆவேசம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 28 October 2022

கடலூரில் அண்ணாமலையின் உருவ பொம்மை எரிப்பு; திமுகவினர் ஆவேசம்

கடலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில்  தமிழக அமைச்சர்களையும் செய்தியாளர்களையும் அவதூறாக பேசிய மாநில தலைவர் அண்ணாமலை உருவபொம்மை எரித்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தமிழுக்கு முடிவுரை எழுத நினைக்கும் திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடலூரில் தலைமை தபால் நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.



அவர் பேசுகையில் தமிழ் மொழியை காக்க திமுக அரசு எதுவும் செய்யவில்லை எனவும் இந்தி திணிப்பு என்னும் பெயரில் ஆங்கிலத்தை திணிப்பதாக குற்றம் சாட்டினார் மேலும் தமிழ் மொழியை காப்போம் என்ற பெயரில் ஆங்கிலத்தை திணித்தால் தெருவுக்கு வந்து பாஜக போராடும் என அறிவித்தார்.


பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில், செய்தியாளர்கள் பேட்டி கேட்ட பொழுது மரத்தின் மீது ஏறிய குரங்கு போன்று இருகிறீங்க என்று அவதூறாக பேசினார்.மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜியை குறிப்பிட்டு சாராயம் விற்பவர்களுக்கெல்லாம் தன்னால் பதிலளிக்க முடியாது என ஆவேசமாக கூறி புறப்பட்டார்.

அவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்  அண்ணாமலை யை கண்டித்து கடலூர் மாநகர திமுக சார்பில் இன்று தி.மு.க அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக சென்று உட்லன்ஸ் சிக்னல் அருகே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உருவ பொம்மை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாநகர திமுக செயலாளர் கே,எஸ் ராஜா மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  இள. புகழேந்தி தலைமையில் மாமன்ற உறுப்பினர் சக்திவேல், சலீம்,முதுநகர்செந்தில், கே.எஸ். ஆர்.கார்த்தி, கே எஸ் ஆர். பாலாஜி, அகஸ்டின் பிரபாகரன்,துர்கா செந்தில்முருகன்அரங்கநாதன்,லெனின்,தமிழரசன்,தேவன்பு, இளந்திரையன், ஆட்டோ செல்வம், கேபிள் தமிழ், கிளைக் கழக செயலாளர் தமிழ்ச்செல்வன், தினகரன், இளைஞர் அணி குருதேவன், மற்றும்  100க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டு பாஜக மற்றும் அண்ணாமலைக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள "தமிழக குரல்https://cuddalore.tamilagakural.com/?m=1

No comments:

Post a Comment