புதிய பேருந்து நிலையத்தை எம். புதுருக்கு மாற்றினால் தீக்குளிக்கும் போராட்டம் முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத் அறிவிப்பு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 18 October 2022

புதிய பேருந்து நிலையத்தை எம். புதுருக்கு மாற்றினால் தீக்குளிக்கும் போராட்டம் முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத் அறிவிப்பு.

கடலூர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் பொன்விழா நிறைவு மற்றும் 51வது ஆண்டு தொடக்க விழாபொதுக்கூட்டம்  கடலூர் பாதிரிக்குப்பத்தில் நடைபெற்றது தெற்கு ஒன்றியசெயலாளர் காசிநாதன் தலைமை தாங்கினார் மாவட்ட அமைத்தலைவர் சேவல் ஜி. ஜே குமார் வரவேற்புரை ஆற்றினார்.

பகுதி செயலாளர்கள் வி. கந்தன், வெங்கட்ராமன, பாலகிருஷ்ணன், கெமிக்கல் மாதவன், தங்க.வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர், கூட்டத்தில் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் மான எம். சி .சம்பத் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் சண்முகம் தலைமைக் அதிமுக பேச்சாளர்கள் முத்து, காசிநாதன், மீனவர் அணி கே.என்.தங்கமணி ஜெயலலிதா பேரவை ஆர்.வி .ஆறுமுகம், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் சி.கே.எஸ் கார்த்திக்கேயன், மாவட்டத் துணைச் செயலாளர் மணிமேகலை, தர்ஷனா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத் பேசுகையில் அ.தி.மு.க பேரியக்கம் தொடங்கி அரை நூற்றாண்டு முடிந்துள்ளது இது 11 கோடி தமிழ் மக்கள் இதயங்களில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா இன்றும் வாழ்ந்து வருவது நமக்கு பெருமைக்குரியதாகும் தற்போது நடைபெறும் திமுக ஆட்சியில் எந்த துறையும் சரியாக செயல்படவில்லை, மேலும் மந்திரிகளின் அவதூறு பேச்சு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் சரியான நடவடிக்கை எடுக்க முடியாமல் இருப்பதற்கு காரணம் அவரது குடும்ப அரசியல் தற்போது மழைக்காலங்கள் தொடங்கியுள்ள நிலையில் முன்னேறப்பாடு பணிகள் நடைபெறாமல் உள்ளது.


சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வடிக்கால் வாய்க்கால்கள் சரியான முறையில் அமைக்காததால் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்க உள்ளது ஆனால் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்காலத்தில் திறமையான நிர்வாகம் காரணமாக மக்களுக்கான ஆட்சி நடந்தது கடலூர் மாநகரில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அதை எம் புதுருக்கு மாற்றுகிறார்கள் இப்படி மாற்றினால் அதிமுக சார்பில் தீக்குளிக்கும் போராட்டம் நடத்துவோம் என்று கூறினார்.


மேலும் அவர் பேசுனையில் கடலூர் மாவட்டத்தில் அருவாமூக்கு திட்டம் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் கடலூர் பகுதியில் மழையால் பாதிப்பதை தவிர்ப்பதற்கு வடிக்கால் வாய்க்கால் திட்டம் போன்றவற்றை செயல்படுத்தி உள்ளோம் இது மட்டுமின்றி கடலூர் அருகே தனியார் சித்திகரிப்பு நிலையத்தில் தினந்தோறும் திருட்டு சம்பவம் நடைபெற்று வருவதால்  கடலூர் மாவட்டம் முழுவதும் திருட்டு சம்பவம் அதிகரித்து வருகிறது இதன் காரணமாக தனியார் கெமிக்கல் கம்பெனி ஐம்பதாயிரம் கோடி முதலீட்டில் வருவதற்கு தயக்கம் காட்டுகிறது ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது பள்ளிகள் முன்பு கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது ஆகையால் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைய நாம் பாடுபட வேண்டும் இவ்வாறு முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத் பேசினார் கூட்டத்திற்கு அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே ஆர் பாலகிருஷ்ணன் இலக்கிய அணி ஏழுமலை ஒன்றிய கவுன்சிலர்கள் கிரிஜா செந்தில்குமார் மகேஸ்வரி விஜயராஜலு மாவட்ட பிரதிநிதிகள் ஆர்வி மணி தமிழ்ச்செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர் கூட்டத்தின் முடிவில் ஒன்றிய துணை செயலாளர் வேல்முருகன் நன்றி கூறினார். 

No comments:

Post a Comment