கடலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பொது கணக்கு குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இன்று 13.09.2022 செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் நெய்வேலி நிலக்கரி நிறுவன பயணியர் மாளிகையில் கூடி தனது ஆய்வு பணத்தை மேற்கொண்டனர்.
பொதுக் கணக்குக் குழு ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பணிகள் தொடர்பான 2021 - 2023 ஆம் ஆண்டிற்கான திட்ட பணிகள் மற்றும் நிறுவனங்களை ஆய்வு செய்தார்கள். அதன்படி கீழ்க்கண்ட இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
- சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம்.
- சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பல்துறை மருத்துவமனை.
- வெங்கனாம்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம்.
- பண்ருட்டி இந்து சமய அறநிலைத்துறையின் இடத்தை தனியார் நபர்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டது.
- நெல்லி குப்பம் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பல்வேறு இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டார்கள்.
கள ஆய்வு மற்றும் மாலை 4 மணியளவில் கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கூட்டம் அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பல்வேறு துறை சார்ந்த ஆய்வு கூட்டம் ஆகியவற்றில் பொதுக் கணக்கு குழு தலைவரும் ஸ்ரீ பெரம்புதூர் சட்டமன்ற உறுப்பினரும் ஆகிய திரு.கு. செல்வப் பெருந்தகை, பொது கணக்கு குழு உறுப்பினரும் நமது மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரும் ஆகிய டாக்டர் சி. சரஸ்வதி காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் திரு. ம. சிந்தனைச் செல்வன், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஒய். பிரகாஷ், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. பூண்டி கே. கலைவாணன், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. கே. மாரிமுத்து, சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஈ. ராஜா, பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. தி வேல்முருகன், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் எம். எச். ஜவாஹிருல்லா ஆகியோர் கலந்து கொண்ட ஆய்வு கூட்டத்தினை கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கே. பாலசுப்பிரமணியம் அவர்கள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
No comments:
Post a Comment