விழுப்புரம் - நாகை நான்கு வழி சாலைக்கு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உயர்த்திய இழப்பீடு வழங்க விசாரணை நடத்தி கூடுதல் தொகை அறிவிக்காமலும், இன்னும் பல கிராமங்களுக்கு விசாரனை நடத்தாமல் மாவட்ட நிர்வாகம் காலம் கடத்துவதை கண்டித்தும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் இழப்பீடாக 10 மடங்கு அதிக தொகையும், மாயவரம் மாவட்டத்தில் இழப்பீடாக 3 முதல் 5 மடங்கு அதிக தொகையும் வழங்கியுள்ள சூழலில் நமது மாவட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் அமைதியாக இருப்பதை கண்டித்தும் சிதம்பரம் சார் ஆட்சியர் அவர்களின் கடிதத்தின்படி பி. முட்லூர் புறவழி சாலை 22 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கும் சொத்துக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்ற காரணத்தினால் தீர்த்தாம்பாளையத்தில் வழித்தடம் 2ஐ கைவிட்டு வழித்தடம் 1ல் சாலை அமைத்திட கோரியும் புதுச்சத்திரம் உளுப்பை இராமசாமி அறக்கட்டளை இடத்தில் குடி இருந்தவர்களுக்கு மாற்று இடம் கொடுக்க கோரியும் பெரியபட்டு முதல் சி.முட்லூர் வரை NH 45A நான்கு வழிச் சாலைக்காக நிலம், வீடு, வணிகவளாகம் கொடுத்து, வீடுகள் இடிக்கப்பட்டும் உரிய இழப்பீடு கிடைக்காமல் அல்லாடும் பாதிக்கப்பட்ட அனைத்து கிராம மக்கள் சார்பில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் 13.09.2022 காலை பெரியப்பட்டு கடலூர் சிதம்பரம் சாலையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் பி.கற்பனைச்செலவம் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் குளஞ்சியப்பன் முந்நிலை வகித்தார். போராட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ரமேஷ்பாபு, விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சரவணன், மார்க்சிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றிய செயலாளர் விஜய், பெரியபட்டு வர்த்தக சங்க தலைவர் ஜெய்சங்கர், மற்றும் குமார், ஜீவா, அஞ்சம்மாள், விமலா உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.
No comments:
Post a Comment