சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைத்தார் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் . - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 12 September 2022

சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைத்தார் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் .

தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் சிதம்பரம் அடுத்த அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைத்தார்.

மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன் முன்னிலையில் நடைபெற்றது பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் கதிரேசன் பதிவாளர் டாக்டர் சீதாராமன் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் சண்முகம் மருத்துவமனை கண்காணிப்பாளர் லாவண்யா குமாரி ஆட்சி மன்ற குழு உறுப்பினர் டாக்டர் பாலாஜி சுவாமிநாதன் அண்ணாமலை நகர் பேரூராட்சி தலைவர் பழனி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


பின்னர் மருத்துவக் கல்லூரி வளாகத்தை பார்வையிட்ட அமைச்சர் புதிய திறனறி பயிற்சி ஆய்வகத்தையும் உயர் சார்பு தீவிர சிகிச்சை பிரிவினை பார்வையிட்டும் இதனைத் தொடர்ந்து சிதம்பரம் ஞானப்பிரகாசம் குலம் 2 கோடியே 80 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டு வரும் பணிகளை நேரில் பார்வையிட்டார் அதனைத் தொடர்ந்து சிதம்பரம் கனகசபை நபர் 2 கோடி செலவில் அமைய உள்ள அறிவு சார் மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


இந்நிகழ்ச்சியின் நகர மன்ற தலைவர் செந்தில்குமார் நகராட்சி ஆணையாளர் அஜிதா பர்வீன் பொறியாளர் மகாராஜன் நகர மன்ற துணைத் தலைவர் முத்துக்குமார் நகரமன்ற உறுப்பினர்கள் ஜேம்ஸ் விஜயராகவன் மூத்த நகர மன்ற உறுப்பினர் ரமேஷ் அ மணிகண்டன் சரவணன் இந்துமதி அருள் நகரக் கழக துணை செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/