அரசு தலைமை மருத்துவமணையில் நோயாளிகளுக்கு உணவு இருந்தும் உண்ணமுடியாத நிலை நடவடிக்கை எடுக்குமா மருத்துவமானை நிர்வாகம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 11 September 2022

அரசு தலைமை மருத்துவமணையில் நோயாளிகளுக்கு உணவு இருந்தும் உண்ணமுடியாத நிலை நடவடிக்கை எடுக்குமா மருத்துவமானை நிர்வாகம்.


கடலூர் அரசு தலைமை மருத்துவமணையில் நோயாளிகளுக்கு உணவு இருந்தும் உண்ணமுடியாத நிலை நடவடிக்கை எடுக்குமா மருத்துவமானை நிர்வாகம்.


கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறும்  நோயாளிகளுக்கு தினமும் காலையில் இட்லி ,பால் ,முட்டை மற்றும் கோதுமை உப்புமா மதியம்  உணவாக காய்கறிகள் கீரை வாழைப்பழம் கொண்டைக்கடலையோடு சாப்பாடும் இரவில் ரவை உப்புமா போன்ற உணவுவகைகள் தயாரித்து உள்நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது ஆனால் இவைகள் யாவும் நோயாளிகள் உண்ணக்கூடிய அளவிற்கு இருப்பதில்லை இதனால் நோயாளிகள் அக்கம்பக்கம் உள்ளவர்களிடம் கடனாகவோ யாசகமாகவோ வெளியில் வாங்கி சாப்பிடும் நிலை உள்ளது.


காலை இரண்டு அல்லது மூன்று இட்லிகள் தருவார்கள் ஆனால் இட்லியை  பிடுவதற்கு மிகவும் கடினமானதாகவும் இட்லியின் அளவு ஆறு அடிஉயர மனிதனின் உள்ளங்கை அளவிலும் மிகவும் மொத்தமானதாகவும் இருக்கும் இரவு உணவாக வரும் ரவை உப்புமா களி போன்று இருக்கும்  பசியோடு நோயாளிகள் வாங்கி அதை குப்பையில் கொட்டும் அவலநிலை நடக்கிறது, மேலும் உள்நோயாளிகளின் எண்ணிக்கைப் பொருத்து உணவை சமைக்கிறார்கள்.

மாவட்டதலைமை மருத்துவமணை என்பதினால் அரை மணி நேரத்திற்கு ஒரு நோயாளி வருகிறார்கள் புதிதாக அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கும் உணவுக்கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஊழியர்கள் உள்ளனர் இதனால் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டு உறவினர்கள் யாரும் இல்லாத நோயாளிகளுக்கு உணவு கிடைப்பதில்லை மேலும் உணவு வழங்குவதற்காக வரும் உழியர்களின் கடுமையான பேச்சுக்கும் ஆளாகும் சூழலால் இவரிடம் வாங்குவதை விட பசியோடு இருந்து விடலாம் என்றும் சில நோயாளிகள் உணவு வாங்குவதில்லை.

நோயாளிகள் உண்ணக்கூடியளவிற்கு அளித்தால் உணவுகள் வீனாக குப்பைத்தொட்டியில் இடம்பெறாது இதை மருத்துவமனை நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment

*/