வடலூர் பார்வதிபுரம் அருள்பா தீர்த்த சாலை பகுதியை சேர்ந்த ரத்தினம் மகன் ராசாங்கம் வயது 68 இவர் பாப்பான் குட்டை ஏரி அருகில் ஆடு மேய்த்துக் கொண்டு இருந்தபோது திடீரென மின்னல் தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டது.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர், மேலூம் மின்னல் தாக்கியதில் இரண்டு ஆடுகள் சம்பவ இடத்திலேயே பலியானது சம்பவம் குறித்து வடலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வயல்வெளியில் ஆடு மேய்த்தபொழுது மின்னல் தாக்கி முதியவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment