அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 16 வது மாநில மாநாடு கடலூரில் செப்டம்பர் 29 30 அக்டோபர் 1 தேதிகளில் நடைபெறுகிறது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 25 September 2022

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 16 வது மாநில மாநாடு கடலூரில் செப்டம்பர் 29 30 அக்டோபர் 1 தேதிகளில் நடைபெறுகிறது.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 16 வது மாநில மாநாடு கடலூரில் செப்டம்பர் 29 30 அக்டோபர் 1 தேதிகளில் நடைபெறுகிறது இதனை ஒட்டி பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி ஓவிய போட்டி கவிதை போட்டி சதுரங்கப் போட்டிகள் நடைபெற்றது இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பட்டதாரிஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் ஜி தெரசா கேத்தரின் தலைமையில் நடைபெற்றது.

மாதர் சங்க மாவட்ட செயலாளர் மாதவி வரவேற்புரை நிகழ்த்தினார் சதுரங்கப் போட்டியை மாதர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் கிரிஜா துவக்கி வைத்தார்.


பரிசு பெற்ற மாணவ மாணவிகளுக்கு கடலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு கோ ஐயப்பன்  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் சுதா சுந்தரராமன் ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள்.


நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கோ மாதவன்  டாக்டர் பிரவீன் ஐயப்பன் கூட்டுறவு சங்க தலைவர்கள் ஆதி  இரவி  குடியிருப்போர் சங்க பொதுச் செயலாளர் மருதவாணன் வெங்கடேசன் மாதர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் தேன்மொழி மாவட்ட தலைவர் மல்லிகா தமிழ்நாடு முற்போக்கு கலைஞர்கள் எழுத்தாளர் சங்கம் மாவட்ட தலைவர் ராஜா செயலாளர் பால்கி மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பாளர் அமர்நாத் சதுரங்க போட்டி அகாடமி நிர்வாகிகள் பிரேம்குமார்   தமிழசெல்வி ஸ்ரீதர் கபிலன்  சுகினா பாரதி விமல்.  சரன்கலை இலக்கியப் போட்டி நடுவர்கள் டாக்டர் அதிதன் பேராசிரியர் தினேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

No comments:

Post a Comment