அ.இ.அ.தி.முக சார்பில் அண்ணா வின் 114 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 25 September 2022

அ.இ.அ.தி.முக சார்பில் அண்ணா வின் 114 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்.

கடலூர் வடக்கு மாவட்ட அ.இ.அ.தி.முக சார்பில் அண்ணா வின் 114  வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் நடைபெற்றது கூட்டத்திற்கு கடலூர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் தொழில்த் துறை அமைச்சருமான எம்.சி சம்பத் தலைமை தாங்கினார் கடலூர் மாநகரபகுதி செயலாளர்கள் வெங்கட்ராமன், பாலகிருஷ்ணன், கந்தன், தங்க வினோத்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கட்சியின் செய்தி தொடர்பாளர்கள் சசி ரேகா, ஆவடி குமார், வேதை சிவ சண்முகம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.


மாவட்ட அவைத் தலைவர் சேவல் ஜி .ஜெ .குமார்வரவேற்புரை ஆற்றினார் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத் பேசுகையில் தமிழகத்தில் தற்போது திமுக ஆட்சியில்  சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய் உள்ளது குறிப்பாக கோவை திண்டுக்கல் ஈரோடு மாவட்டங்களில் பெட்ரோல் குண்டு வெடித்துக் கொண்டிருக்கிறது ஆனால் அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருந்தது வளர்ச்சி இல்லாத மாநகராட்சியாக கடலூர் மாநகராட்சி உள்ளது என்றும் முறையாக அணைத்து வீடுகளுக்கும் குடிநீர் வருவதில்லை குப்பைகள் வீதிகளில் குவிந்துக்கிடக்கிறது துர்நாற்றம் வீசுகிறது பன்றி தொல்லைகளை கட்டுப்படுத்த மாநகராட்சி சுகாதார சீர்கேட்டில் சிக்கி தவிக்கிறது என்றுக் கூறினார்.


இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எம் .சி .தாமோதரன் மீனவரணி பிரிவு இன செயலாளர் கே என் தங்கமணி அம்மா பேரவை துணைச் செயலாளர் ஆர்.வி ஆறுமுகம் ஒன்றிய செயலாளர்கள் காசிநாதன், செல்வ அழகானந்தம் மாவட்டத் துணைச் செயலாளர் தெய்வ .பக்கிரி முன்னாள் நகர மன்ற தலைவர் சி .கே .சுப்பிரமணியன் மாவட்ட துணை செயலாளர் மணிமேகலை தஷ்னா உட்பட பலர் கலந்து கொண்டனர் கூட்டத்தின் முடிவில் திருப்பாதிரிப்புலியூர் பகுதி செயலாளர் கெமிக்கல் மாதவன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment