மாவட்டம் முழுவதும் அதிகரித்து வரும் காய்ச்சல்; கட்டுப்படுத்த சிறப்பு மருத்துவ முகாம்கள். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 25 September 2022

மாவட்டம் முழுவதும் அதிகரித்து வரும் காய்ச்சல்; கட்டுப்படுத்த சிறப்பு மருத்துவ முகாம்கள்.

மாவட்டம் முழுவதும் காய்ச்சல் உள்ளிட்ட பல் வேறு  நோய் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.



கடலூர் சட்டமன்றம் பகுதிக்குட்டப்பட்ட கடலூர்மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மண்டலம் வாரியாக பல்வேறு அதிநவீன வசதிகள் மற்றும் அனைத்து விதமான முதல் கட்ட பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் முகாம் ஏற்பாடுகளை இந்திய மருத்துவ சங்கத்தினர் இணைந்து டாக்டர் பிரவீன் ஐயப்பன் தலைமையிலான மருத்துவர்கள் குழுவினர் கடலூர் முதுநகரில் துவங்கி மேற்கொண்டுள்ளனர்.

முகாமை கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன் தலைமை தாங்கி துவங்கி
வைத்தார். நிகழ்ச்சியில் இந்திய மருத்துவர் சங்க நிர்வாகிகள் மருத்துவர்கள் பாண்டியன், முகுந்தன் முன்னிலை வகித்தனர் மாவட்ட திமுக பொருளாளர் வி .எஸ். எல். குணசேகரன் மாமன்ற உறுப்பினர்கள் கீதா குணசேகரன், பிரகாஷ், தமிழரசன்,சரத், சுமதி ரங்கநாதன், ஆறமுதன் மகேஸ்வரி விஜயகுமார் கர்ணன் பாருக் அலி, கீர்த்தனா ஆறுமுகம், ராதிகா பிரேம்குமார், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் ஏ.ஜி .சம்பத் இளைஞரணி அமைப்பாளர் ஏ. ஜி .ஆர். சுந்தர் கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ஆதி. பெருமாள், ரவிச்சந்திரன் மற்றும் நிலா தங்கராசு கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

No comments:

Post a Comment