கடலூர் மாவட்டம் / திட்டக்குடி வட்டம் / மங்களூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட / நிதிநத்தம் கிராம ஆதிதிராவிட பொதுமக்கள் பல ஆண்டுகளாக இலவச வீட்டு மனை கேட்டு போராடி வருகின்றனர். அனைத்து தரப்பட்ட அதிகாரிகளிடமும் மனு அளித்தும் எந்த பயனும் இல்லாத சூழலால் கோரிக்கைகளை நிறைவேற்றாத ஆதிதிராவிட நலத்துறையை கண்டித்தும். (மற்றும்) இலவச வீட்டுமனை பட்டா உடனடியாக வழங்க வலியுறுத்தியும், திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
நிகழ்விற்கு தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் தயா.பேரின்பம் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார், இந்நிகழ்வில் மாநிலத் துணைச் செயலாளர் முருகானந்தம்/ கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வீரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கலை இலக்கிய பேரவை மாவட்டச் செயலாளர் முருகேசன்/கிராம தெருக்கூத்து பேரவை திட்டக்குடி தொகுதி செயலாளர் ராயர் /பாலமுருகன் கிராம பொதுமக்கள் மதியழகன் ராம்குமார்/வெங்கடேசன்/பொற்செல்வி/சித்திராங்கி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment